Written by Hasiba B Amin for jantakareporter

இன்று பல பல்கலைகழகங்களிலும் கல்விநிறுவனங்களிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊடுருவல் இருப்பதை கண்கூடாக காண முடிகிறது. கல்வி நிறுவனங்கள் என்பவை மாணவர்களுக்கு பல்வேறுபட்ட கருத்துக்களை விவாதிக்கவும், விமர்ச்சிக்கவும் தேவையான மேடையை அமைத்து தரவேண்டும். ஆனால் தற்போது முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ் பிடிக்குள் வந்துவிட்ட பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் ஹிந்துத்வாவுக்கு மட்டுமே கட்-அவுட்டு மற்ற எல்லாவற்றுக்கும் கெட்-அவுட்டு என்ற நிலைமை உருவாகியிருக்கிறது.

bhu-122014

இந்த பல்கலைக்கழகம் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியில்தான் இருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்துதுவ கருத்துக்களில் வேரூன்றியவரான இப்பல்கலையின் துணை வேந்தர் கிரிஷ் சந்திர திரிபாதி, பிரதமர் மோடியின் அருளாசியுடன் இந்தப் பதவிக்கு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அதுமட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு இரத்தின கம்பளம் விரித்து அவர்கள் உள்ளே தங்கள் பேரணியை நடத்துமளவுக்கு இடம்கொடுத்தவரும் இவரே!

இந்த பல்கலைகழகத்தில் உயர்சாதியினருக்கு மட்டுமே பணிபுரிய வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும் அதை எதிர்த்து கேள்வி கேட்போர் பணிநீக்கம் செய்யபடுவதாகவும், எதிர்குரல்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றனர்.

இப்பல்கலைக் கழகத்தில் நடக்கும் அராஜகங்களில் சில உங்கள் பார்வைக்கு:

  • மாணவர்களின் கருத்துரிமை முற்றிலும் பறிக்கப்பட்டுள்ளது. அதிலும் மாணவிகள் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மாணவிகள் அசைவ உணவு சாப்பிடக்கூடாது என்பது அங்கே எழுதப்படாத சட்டமாகும். ஒரு மாணவி இரவு 8 மணிக்கு மேல் போனில் பெற்றோருடன்கூட பேசக்கூடாதாம்.
  • கல்லூரியின் துறைத்தலைவர்கள், முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் இந்துதுவா கருத்தில் ஊறிய உயர் சாதியினர்.
  • கல்லூரியின் பட்ஜட் ரூ.760 கோடி ஆனால் செலவு கணக்கு இதுவரை காட்டப்படவே இல்லை. இந்துதுவாவை பரப்புவது மற்றும் பணம் சம்பாதிப்பது இந்த இரண்டுமட்டுமே நிர்வாகத்தின் தாரக மந்திரம்.
  • இந்துதுவாவுடன் முரண்படும் எந்த கருத்துக்களுக்கும் பல்கலையினுள் இடமில்லை. காதலர் தினம் போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடுவோர் உட்சபட்ச தண்டைனைகள் வழங்கப்படும். சைபர் நூலகத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் சிலபஸை தவிர வேறு எதையும் படிக்க வேண்டியதில்லை என்று கல்லூரி நிர்வாகமே நூலகத்தை மூடிவிட்டதாம். அதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் மீது கொலைமுயற்சி முதலான கிரிமினல் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
  • ஒருபக்கம் ஒழுக்கம் என்ற பெயரில் அடக்குமுறைகள் இருக்க மறுபக்கம் சில ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருக்கும் மாணவர்களின் அறைகளில் பெட்ரோல் குண்டுகள் வைக்கப்பட்டிருக்கும் தகவலும் வந்திருக்கிறது.

கடுமையான சர்வாதிகாரம் நிலவிவரும் சூழலில் எந்த எதிர்குரலும் எழுப்ப முடியாத நிலையில் மாணவர்கள் இருப்பதாக தகவல்கள் வந்திருக்கிறது.

Note: The author is the National General Secretary of NSUI. This article is published in jantakareporter.com. The views expressed are the author’s own and patrikai.com may not necessarily subscribe to them