பாவனா பலாத்கார வழக்கு: நடிகை காவ்யா தலைமறைவு: கைது செய்ய போலீஸ் தீவிரம்

கொச்சி:

லையாள நடிகை பாவனா கடத்தல் வழக்கில்  பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  அவரது மனைவி காவ்யா மாதவனும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை பாவனா, கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் வந்துகொண்டிருந்த போது மர்ம கும்பலால் கடத்தப்பட்டு, காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக  பாவனாவின் முன்னாள் கார் டிரைவர் பல்சர் சுனில் உள்பட  6 பேர் கைது செய்யப்பட்டனர்.

பல்சுனிலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதற்கிடையில் பல்சர் சுனிலின் நண்பர், தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக நடிகர் திலீப் போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, நடிகர்  திலீப்பிடமும், அவருடைய மேலாளர் அப்புண்ணி, சினிமா இயக்குனர் நாதிர் ஷா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையின்போது, காரில் பாவனாவிடம் பாலியல் பலாத்காரம் செய்த மொபைல் வீடியோவை நடிகர் திலிப்பின் மனைவியான காவ்யா மாதவனின் நிறுவனத்தில் ஒப்படைத்துள்ளதாக பல்சர் சுனில் தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து கொச்சி காக்கநாட்டில் உள்ள காவ்யா மாதவனுக்கு சொந்தமான  நிறுவனத்தில் கொச்சி போலீசார் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படு கிறது.

இதைத்தொடர்ந்து  நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பரும் இயக்குனருமான நாதிர்ஷா ஆகியோரிடம்  போலீசார்  விசாரணை நடத்தினர்.

அப்போது இயக்குனர் நாதிர்ஷா அளித்த தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்ததாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

அதைத்தொடர்ந்து இவர்களின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணிக்க தொடங்கினர். இதற்கிடையில் நடிகர் திலீப் தனது மனைவி காவ்யா மாதவனுடன் தலைமறைவானதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று மீண்டும் நடிகர் திலீப்பிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து நடிகர் திலீப்பின் மனைவு நடிகை காவ்யா மாதவன் தனது தாயாருடன் திடீரென தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை காவ்யா மாதவன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என மலையாள திரையுலகில் பரபரப்பு நிலவி வருகிறது. அவரை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது.


English Summary
Bhavana sexual harassment: Actress Kavya madavan abscond