
1990-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘என் உயிர்த் தோழன்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் பாபு. அந்தப் படத்துக்கு வசனம் எழுதியவரும் பாபுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து ‘மனசார வாழ்த்துங்களேன்’ படத்தின் சண்டைக் காட்சியில் டூப் போடாமல் நடித்ததால் விபத்தில் பாபுவின் முதுகுத்தண்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் நடமாட முடியாத நிலையில் படுத்த படுக்கையானார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையிலேயே காலத்தைத் தள்ள வேண்டிய சூழலுக்கு ஆளானார்.
மருத்துவ சிகிச்சைக்கான செலவு அதிகமானதை தொடர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உதவி கேட்டிருந்தார் .இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட இயக்குநர் பாரதிராஜா, பாபுவை நேரில் சென்று சந்தித்து கண்ணீர் விட்டுள்ளார் .
தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராகவும், அமைச்சராகவும் இருந்து மறைந்த ராஜாராமின் உறவினர்தான் பாபு என்பது நினைவுகூரத்தக்கது.
[youtube-feed feed=1]