விவசாயிகள் போராட்டம்: நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம்

Must read

புதுடெல்லி:
விவசாயிகள் போராட்டத்தின் 10 மாத காலத்தைக் குறிக்கும் வகையில், நாளை பாரத் பந்த் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுக்கும் 40க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்களின் சம்யுக்த் கிசான் மோர்ச்சா, நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

விவசாயிகள் போராட்டத்தின் 10 மாத காலத்தைக் குறிக்கும் வகையில், நாளை பாரத் பந்த் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் சிங்கு எல்லையில் நடந்த இரண்டு நாள் தேசிய மாநாட்டைத் தொடர்ந்து, எஸ்.கே.எம் ‘பாரத் பந்த்’-க்கு அழைப்பு விடுத்தது.

காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

More articles

Latest article