புதுடெல்லி: 
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,   “டாக்டர் மன்மோகன் சிங் ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” பதிவிட்டுள்ளார்.
மேலும்,  அவரை “பயமற்றவர்” மற்றும் “புத்திசாலி” என்று அழைத்த காங்கிரஸ் தலைவர், டாக்டர் சிங் நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நன்கு புரிந்துகொள்கிறார், மேலும் அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.