கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில் 4 பேருக்கு பி.எஃப்-7 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல நாடுகளில் ஒமிக்ரான் பிஎப் 7 புதிய வகை கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் இந்தியாவில் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே சமயம் முக கவசம் அணிவது மற்றும் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தியாவிலும் புதிய வகை கொரோனா வைரஸ் இன் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் பிஎப் 7 கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மேற்கு வங்கம் மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மேற்கு வங்கத்தில் நான்கு பேருக்கு பி எஃப் 7 கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது எனவும் அவர்கள் நான்கு பேரும் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவித்துள்ளது.