மாமல்லபுரம்:

சீன அதிபர் , பிரதமர் மோடியே இடையே தமிழகத்தின் புராதன நகரமான மாமல்லபுரத்தில்  சந்திப்பு நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜிஜின்பிங் இடையே ஒரு உயரமான அதிகாரி பின்தொடர்ந்து செல்வதை அனைவரும் அறிந்திருப்போம்… அவர் யார் தெரியுமா?

அவர்தான், இந்திய துாதரகத்தின் முதன்மை செயலர் மதுசூதன் ரவீந்திரன்.  தமிழகத்தைச் சேர்ந்தவரான மதுசூதன், சென்னையில் உள்ள  அண்ணா பல்கலையில், பொறியியல் படித்து, இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். கடந்த 2007ம் ஆண்டு முதல் வெளியுறவுத் துறையில் பணியாற்றி வரும், பெரும்பாலான ஆண்டுகள் சீனாவில் பணியாற்றி உள்ளார். இதன் காரணமாக, அவருக்கு சீனாவின் அதிகாரப்பூர்வ மொழியான மாண்டரின் உட்பட பல மொழிகள் நன்கு தெரியும்.

இவர்தான் பிரதமர் மோடி,  சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே மொழிப்பெயர்ப்பாளராக, இருவரையும் நிழலாக தொடர்ந்து வந்தார். சில இடங்களில் சீனாவை சேர்ந்ம மற்றொரு அதிகாரியும் மொழிபெயர்பாளராக இருந்தார்.

தமிழகத்தைச் சேர்ந்தவரான மதுசூதன் சீனத் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள இந்திய துாதரகத்தின் முதன்மை செயலர்ராக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே சீனாவில் நடந்த, மோடி – ஜின்பிங் சந்திப்பின்போதும்,  மொழி பெயர்ப்பாளராக திறமையாக பணியாற்றியவர், தற்போதைய சந்திப்பின்போதும், மொழி பெயர்ப்பாளராக பணியாற்றி வருகிறார்.

கடந்த  2013ம் ஆண்டு  சீனாவுக்கான, இந்திய துாதரகத்தின், இரண்டாவது செயலராக நியமிக்கப்பட்டவர், சமீபத்தில் முதன்மை செயலராக உதவி உயர்வுபெற்றுள்ளார்.

தற்போதைய  மோடி – ஜின்பிங் சந்திப்பு முறைசாரா சந்திப்பாக அமைந்துள்ளதால் இருநாட்டுத் தலைவர்களும் எந்தக் குறிப்புகளும் வைத்துக்கொள்ளாமலேயே உரையாடுவார்கள். இந்தச் சந்திப்பின்போது  இருநாட்டு அதிபருடன் மேலும் இரண்டு பேர் உடனிருக்கின்றனர். அவர்கள்தான் மொழி பெயர்ப்பாளர்கள்.

மசூதுன் ஏற்கனவே  சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றி னார். பிறகு மீண்டும் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தின் இரண்டாவது செயலாளராக நியமிக்கப்பட்டு 2013ல் சீனாவுக்கு அனுப்பப்பட்டார்.

பணியில் பெரும்பாலான நாட்களை சீனாவில் கழித்த மது சுதனுக்கு, முதல் பணியே சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூன்றாம் நிலை செயலராகத்தான் வழங்கப்பட்டது பின்னர் பதவி உயர்வுபெற்று முதன்மை செயலாளராக உள்ளார்.