திருச்சி:

காவிரி பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால் பதவி விலகுங்கள் என்று  தமிழக ஆட்சியாளர்களை கமல் வலியுறுத்தி உள்ளார்.

நடிகர் கமல் துவக்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் மாநாடு திருச்சியில் நடந்துகொண்டிருக்கிறது.

“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன் : கண்டனக்கூட்டம்” என்று இந்த மாநாடு நடைபெறுகிறது.

இதில் பேசிக்கொண்டிருக்கும் கமல்ஹாசன், “தமிழக அரசு நினைத்தால் தீர்வு உண்டு. ஆனால் அதை நோக்கி தமிழக அரசு நகரவே இல்லை. மத்திய அரசுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு செயல்படுகிறது  தமிழக அரசு” என்று குற்றம்சாட்டினார்.

மேலும், “தீர்வு கிடைக்கும் என்று நினைக்கும்போது அரசியல்வாதிகள் புகுந்து குளறுபடி செய்து நமக்குள்ள உரிமையை தட்டிப்பறிக்கின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு தவறு அழுத்தமாக கூறுகிறேன்” என்றார்.

மேலும், “காவிரி பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள்.  அல்லது தள்ளி நில்லுங்கள். செய்வதற்கு எங்களிடம் ஆட்கள் இருக்கிறார்கள்” என்று காட்டமாக கமல் தெரிவித்தார்.

அதாவது காவரி பிரச்சினையில் தீர்வு எட்ட முடியவில்லை என்றால் ஆட்சியைவிட்டு விலகுங்கள் என்று தமிழக ஆட்சியாளர்களை வலியுறுத்தியிருக்கிறார் கமல்.