திருச்சி

காவல்துறை அதிகாரி பைக்கை எட்டி உதைத்ததில் கீழே விழுந்து மரணமடைந்த உஷாவின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவியை கமலஹாசன் வழங்கி உள்ளார்.

கடந்த மாதம் திருச்சியில் உஷா என்னும் பெண் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.   அவர் கணவர் ஹெல்மெட் அணியாததால் அவர்களை துரத்திய காவல்துறை அதிகாரி பைக்கை எட்டி உதைத்ததில் கீழே விழுந்த உஷா மரணம் அடைந்தார்.    அவர் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி அளிக்க உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அறிவித்தார்.

தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள கமலஹாசன் திருச்சிக்கு வந்துள்ளார்.  அவர் தான் கூறியபடி உஷாவின் குடும்பத்தினருக்கு நிதி உதவியை வழங்கி உள்ளார்.   உஷாவின் கணவருக்கு ரூ.5 லட்சமும்,  உஷாவின் தாயார் லூர்து மேரி மற்றும் சகோதரர் ராபர்ட்டுக்கு ரூ 5 லட்சமும் கமல் அளித்துள்ளார்.