சென்னை: தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்காக முனைவர் கா.செல்லப்பனுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டில் சிறந்த எழுத்தாளர்கள் சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவில் சாகித்ய அகாதமி விருது (Sahitya Akademi Award) வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில்,  தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக் கான சாகித்ய அகாதமி விருது முனைவர் கா.செல்லப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரவீந்திரநாத் தாகூரின் கோரா நாவலை மொழிபெயர்த்ததற்காக அவருக்கு சாகித்ய அகாதமி விருத அறிவிக்கப்பட்டுள்ளது.
முனைவர் கா.செல்லப்பன் சிவகங்கை மாவட்டத்தில் 1936 ஆம் ஆண்டு பிறந்தவர். ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ள கா.செல்லப்பன் காமராசர் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்ட ஆய்வை முடித்தார். இலக்கியத்தில் பழம்புதுமை புதுப்பழமை, திருக்குறள் முதல் கிரிக்கெட் வரை, விடுதலை சிட்டும் புரட்சிக்குயிலும், ஒப்பியல் தமிழ், ஒப்பிலக்கிய கொள்கைகளும் செயல்முறைகளும் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

அகாதமி  விருது அறிவிக்கப்பட்டுள்ள முனைவர் கா.செல்லப்பனுக்கு ரூ.50000 பரிசுத் தொகையும், கேடயமும் வழங்கப்பட உள்ளது.