சென்னை: ஜுன் 2ந்தேதி பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்பட உள்ள நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அதன்படி,  மாணவர்களுக்கு சுவாரசியமாக பாடம் நடத்தும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில்,   BEST INNOVATIVE TEACHING AWARD வழங்கப்படும் என கல்வித்துறை அறிவித்து உள்ளது. அதாவது,   மாணவர்களுக்கு வகுப்பறை கல்வி மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் அசிரியர்களின் புதிய முயற்சிகளை பாராட்டி  விருது வழங்கி சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

“சிறந்த புதுமையான கற்பித்தல் விருது” ஆசிரியர்களின்  கற்பித்தல் முறைகளில் விதிவிலக்கான படைப்பாற்றல் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தும் ஆசிரியர்களை அங்கீகரிக்கிறது, பெரும்பாலும் தொழில்நுட்பம், புதுமையான கற்பித்தல் மற்றும் உள்ளடக்கிய கற்றல் சூழல்களை உள்ளடக்கியது. இந்த விருதுகள் மாணவர்களின் கற்றல் மற்றும் ஈடுபாட்டின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் கல்வியாளர்களைக் கொண்டாடுகின்றன.

அதாவது,  அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு புதிய உத்திகளை பயன்படுத்தி எளிமையாககவும், சுவராசியமாகவும்  பாடம் கற்றுக் கொடுக்கும் புதிய முயற்சியை ஊக்குவிக்கும் வகையில், ஆசிரியர்களை பாராட்டி,  இந்த கல்வி ஆண்டு முதல் அவர்களுக்கு BEST INNOVATIVE TEACHING AWARD பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சமீபகாலமாக அரசு பள்ளியில் பணிபுரியும் பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களது பாடம் நடத்தும் முறையை மாணவர்கள் மையமாக மாற்றியுள்ளனர். அதன் மூலம் மாணவர்கள் எளிதில் பாடத்தை புரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர்கள் புதுமையான பயிற்சிகளை தந்து வருகின்றனர்.

இதனால், மாணவர்கள் வகுப்பறையில் மிகவும் ஆர்வத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். அசிரியர்கள் தங்களது புது முயற்சியால் மாணவர்களை கற்றலை நோக்கி இழுத்து செல்லுகின்றனர். அவர்களது அர்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றலை அங்கீகரிக்கும் வகையிலும், பாராட்டு தெரிவிக்கும் வகையிலும் 2025-26 ஆம் ஆண்டில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

இதன் மூலம் மாணவர்களின் புரிதலுக்காக பாடுபடும் ஆசிரியர்கள் உற்சாகம் பெறுவார்கள். அதுமட்டுமின்றி அவர்களை பாராட்டுவது மூலம் மற்ற ஆசிரியர்களும் இதுபோன்று மாணவர்களை மையமாக கொண்டு புதிய முறையில் பாடம் எடுப்பார்கள். இது மாணவர்களுக்கு வகுப்பறை கல்வியை சுவாரசியமாக்கும்.

மேலும், இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்க வழிவகுக்கும். மாணவர்கள் டிஜிட்டல் கருவிகள், அன்றாட வாழ்க்கையின் எடுத்துக்காட்டுதல்களுடன் ஒப்பிட்டு பாடத்தை படிக்கும்போது அவர்கள் சிறந்த சிந்தனையுடனும், நீண்ட காலம் நினைவில் நிற்கும் அனுபவ கல்வியையும் பெற முடியும்.

இவ்வாறு புதுமையான முறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஒரு மாவட்டத்தை சேர்ந்த 10 ஆசிரியர்கள் என 38 மாவட்டங்களில் இருந்து 380 ஆசியர்களை மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், அரசு கல்வியியல் கல்லூரி முதல்வர் அல்லது அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஆகியோர் அடங்கிய ஒரு உயர் மட்ட குழு தேர்ந்தெடுக்கும்.

அவ்வாறு தேர்ந்தெடுக்கபட்ட 380 ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

இவ்வாறு அறிவித்துள்ளது.

[youtube-feed feed=1]