பெங்களூரு:

கணவரின் நினைவாக 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

பெங்களூருவைச் சேர்ந்த ஜானட் யெக்னேஷ்வரன்.
தனது கணவர் இறந்தபின், கடந்த 2006-ம் ஆண்டு அவரது நினைவாக ஜானட் யெக்னேஷ்வரன் செடி நட்டுள்ளார்.

இதன்பின்னர் பெங்களூரு மாநகரம் மற்றும் கர்நாடகாவின் மற்ற பகுதிகளில் 73 ஆயிரம் செடிகளை நட்டுள்ளார்.

தெற்கு பெங்களூரு எஜிபுராவில் வசித்த வரும் 68 வயதான ஜானட் இன்னும் சில நாட்களில் 75 ஆயிரம் செடிகளை நட்டு சாதனை படைக்கப் போகிறார்.
இது குறித்து ஜானட் கூறும்போது,என் கணவர் யெக்னேஷ்வரன் கடந்த 2005-ம் ஆண்டு இறந்தார்.
அந்த நேரம் பெங்களூருவில் வளர்ச்சிப் பணிகளுக்காக மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.

இதை எதிர்த்து தர்ணா செய்யலாம் என்று நினைத்தேன். அதன்பிறகுதான், செடிகளை நடுவது என முடிவு செய்தேன்.

என் கணவர் பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்தேன். சில இடங்களில் செடிகளுக்கு ஊற்ற தண்ணீர் இருக்காது. பணம் கொடுத்து தண்ணீர் வாங்கித்தான் செடிகளுக்கு ஊற்றுகிறேன் என்றார்.