பெங்களூரு

ளைஞர் காங்கிரஸார் ஆக்சிஜன் அளித்து உதவியதற்குப் பெங்களூரு ஜெயஸ்ரீ மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை புகழ்ந்து கடிதம் அனுப்பி உள்ளது.

கொரோனா பாதிப்பு நாடெங்கும் அதிகரித்து வருகிறது.   கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் அதே நிலையில் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது.    நோயாளிகள் அதிகரிப்பு விகிதத்தை விடப் பன்மடங்கு குறைவாக ஆக்சிஜன் உற்பத்தி விகிதம் உள்ளதால் ஆக்சிஜன் பற்றாக்குறை கடுமையாகி உள்ளது.

இந்நிலையில் இளைஞர் காங்கிரஸ் பல நகரங்களில் ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு தங்கள் முயற்சியில் ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற்றுத் தருகின்றனர்.   ஏற்கனவே தலைநகர் டில்லியில் நீயுஜிலாந்து தூதரகம் உள்ளிட்ட பல வெளிநாட்டு அரசு அலுவலகங்களுக்கு  ஆக்சிஜன் விநியோகம் செய்துள்ளனர்.

அவ்வகையில் பெங்களூரு நகரில் அமைந்துள்ள ஜெயஸ்ரீ மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது.  இது குறித்து தகவல் அறிந்த இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் உடனடியாக ஆக்சிஜன் விநியோகம் செய்துள்ளனர்.

இது குறித்து ஜெயஸ்ரீ மருத்துவமனை எழுதியுள்ள கடிதத்தில்,

“எங்கள் வேண்டுகோளுக்கு இணங்க எங்கள் நோயாளிகளுக்கு அவசரமாக தேவைப்பட்ட ஆக்சிஜனை பெற உதவிய இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த கமலேஷ் மற்றும் ஆஷிக் கவுடாக்கு எங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  அவர்கள் நேரத்தில் செய்த உதவியால் 34 கொரோனா நோயாளிகள் மரணத்தில் இருந்து தப்பி உள்ளனர்.

எங்கள் இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றியை தெரிவித்து கொள்வதுடன் மேலும் இது போன்ற பணிகளைச் செய்ய வாழ்த்துகிறோம்”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.