பெல்ஜியம்: 
பெல்ஜியத்தில் 7 லட்சத்து 50 ஆயிரம் டன் உருளைக்கிழங்கு விற்பனை செய்யப்படாமல் வீணாகி வருவதை தடுக்கும் வகையில்,   மக்கள் வாரத்திற்கு இரண்டு முறை உருளைக்கிழங்கு சாப்பிட்ட வேண்டும் என்று பெல்ஜியம் அரசு வலியுறுத்தி உள்ளது.
கொரோனா பிரச்சினை காரணமாக உருளைக்கிழங்கு அதிகளவில் விளைந்துள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் சிறிய நாடான பெல்ஜியத்தில், தேசிய உணவான உருளைக்கிழங்காய் சமைத்து சாப்பிட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த உணவு பார் மற்றும் ரெஸ்ட்ரெண்ட்களில் பொது மக்களால் வழக்கமாக சாப்பிடப்படும் உணவு குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசிய பெல்ஜியம் உருளைகிழங்கு தொழிற் சாலை அமைப்பான பெல்கபோமின் பொது செயலாளர் ரோமின் கூல்ஸ் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, 30 லாரிகளில் நிரப்பும் அளவு கொண்ட, 7 லட்சத்து 50 ஆயிரம் டன் எடை கொண்ட உருளை கிழங்கு விற்பனை செய்யப்படாமல் இருக்கிறது.
கொரோனா பரவல்  பிரச்சினை பெரிய அளவில், உருளைக்கிழங்கு விற்பனை செய்யப்படமால் உள்ளது. இதில் 75 சதவிகிதம் பெல்ஜியத்தில் தேக்கமடைந்து உள்ளது. இந்த உருளைக்கிழங்கு களை சேமித்து வைக்க பெரியளவிலான குளிர் சாதன பெட்டி தேவைப்படுகிறது. இதற்காக பெரியளவு குளிர்சாதன கிடங்கை தொழில் நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன.
இந்த பிரச்சினையை தீர்க்கும் வகையில், பெல்ஜியம் மக்கள் வாரத்திற்கு இருமுறை வெறுக்கப்பட்ட உருளைக்கிழங்கை சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து கூல்ஸ் தெரிவிக்கையில், நாங்கள் நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில், உருளைக்கிழங்கு விற்பனையை அதிகரிக்க பிரச்சாரம் செய்து வருகிறோம். இதன் மூலம், நாட்டில் உணவு வீணாவதை தவிர்க்க முயற்சி செய்கிறோம் என்றும் வர கூறினார்.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், எஞ்சி உள்ள 25 சதவிகித தொழிற் சாலைகள், சிறப்பாக செயல் பட்டு வருகின்றன. அதாவது, பொதுமக்கள் வீட்டில் சமைத்து, நொறுக்கு தீனியாக சாப்பிடும், உருளைக்கிழங்கு மற்றும் நொறுக்கு தீனிகளை தயாரித்து வருகின்றன.
பெல்ஜியம் நாட்டில், கொரோனா பரவல் லேசாக தொடங்கியதை அடுத்து, கடந்த மார்ச் 18ம் தேதி தேசிய அளவிலான ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இந்நிலையில், ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் வெளிட்டுள்ள புள்ளி விபரப்படி,  இன்று வரை, பெல்ஜியத்தில், 46,687 பேருக்கு கொரோனா பாதிப்பை ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால், 7, 207 பேர் உயிரிழந்தனர் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, ஊரடங்கை  மூன்று நிலைகளில் தளர்த்துவதாக பெல்ஜியம் பிரதமர் சோபி வில்லியம்ஸ் அறிவித்தார். இதன்படி, மே 4-ஆம் தேதி முதல் சில வர்த்தக மையங்களை திறக்க அனுமதி அளித்தது. ஆனாலும், காபி ஷாப் மற்றும் ரெஸ்ட்ரெண்ட்களை, ஜூன் 8ம் தேதி வரை திறக்க அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப் பாடுகள் தளர்த்தி கொள்ளப் பட்டாலும், உருளை கிழங்கு உற்பத்தியாளர்களுடன் தொடர்புடைய கோடை விழா ரத்து செய்யப் பட்டதால், பெல்ஜியம் உருளை கிழங்கு தொழில் செய்யப்பவர்கள், நீண்ட கால சர்ச்சையை எதிர்கொள்ள உள்ளனர் என்று கூல்ஸ் தெரிவித்தார்.
உண்மையை சொல்ல வேண்டுமானால் உருளைக்கிழங்கின் பயன்பாடு பெல்ஜியத்தில் அதிகரித்து உள்ளது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவால் தேக்கமடைந்து உள்ள உருளை கிழங்குகளை அதிகளவில் பொது மக்களை சாப்பிட சொல்வதே சிறந்த தீர்வாக இருக்கும் என்று கூல்ஸ் தெரிவித்தார்.
இது மட்டுமின்றி, விவசாயிகள் உருளைக்கிழங்கை அதிகளவில் விளைவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.