லக்னோ:

த்திரபிரதேசத்தில் நடைபெற்று முடிந்த 2 லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றிபெறும் நிலையில் உள்ளது.

இந்நிலையில்,உ.பி.யில்  பாஜக பின்னடைவை  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பதிவில், முடிவின் ஆரம்பம் தொடங்கிவிட்டது என்று பாஜகவை விமர்சித்தும், மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவுக்கு மம்தா பானர்ஜி வாழ்த்தும் தெரிவத்துள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.  2 லோக்சபா தொகுதிகளிலும் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் முன்னிலை வகித்து வருகின்றனர். அவர்களின் வெற்றி உறுதியாகி உள்ளது.

இதன் காரணமாக மாநிலம் முழுவதும் சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

பாஜக ஆளும் மாநிலமான உ.பி.யில், ஏற்கனவே முதல்வரும், துணைமுதல்வர் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியில், தற்போது  பாஜகவுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டுள்ளது.

அதுபோல பீகாரில் நடைபெற்ற அரரியா, பாபுவா, ஜெகனாபாத்  சட்டமன்ற இடைத்தேர்தலிலும் பாஜக தோல்வி அடைந்து,  லாலுவின் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

இது பாஜகவினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில்,  உத்திர பிரதேச இடைத்தேர்தலில் சமாஜ்வாடி வேட்பாளர்கள் வெற்றி உறுதி  செய்யப்பட்டுள்ள நிலையில்,  மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவுக்கு மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் பீகாரின் முன்னாள் முதல்வர் லாலுவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், முடிவின் ஆரம்பம் தொடங்கிவிட்டது என்று பாஜகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.