இந்த (பாஜக தலைமையிலான) அரசாங்கம் தங்கள் தேர்தல் அறிக்கையில் மசோதாவை நிறைவேற்றுவதற்காக (பாராளுமன்றத்தில்) கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தது, ஆனால் அவர்கள் அதைப் பற்றி எதுவும் செய்யவில்லை, ”என்று குற்றம் சாட்டியவர்,
2014மற்றும் 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தனது அறிக்கையில், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை சட்டத்திருத்தம் மூலம் வழங்க உறுதி பூண்டுள்ளது. 2014ல் இருந்து இந்த மசோதா குறித்து 22க்கும் மேற்பட்ட கேள்விகள் உறுப்பினர்களால் கேட்கப்பட்டதாக கனிமொழி கூறினார். ஆனால் அதே பதில்களை அரசு ஆழ்ந்த ஆய்வு செய்து வருகிறது, அதை கவனமாக பரிசீலித்து வருகிறது,” என்றே கூறி வருகிறது. பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை, காலம் தாழ்த்தாமல் உடனே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியவர், 25 ஆண்டுகளாகியும், நிறைவேற்றப்படாத மகளிர் இடஒதுக்கீடு மசோதா எப்போது நிறைவேற்றப்படும் என்று கேள்வி எழுப்பினார்.