சென்னை,

த்தியஅரசின் மாடுகள் விற்பனை,மாட்டுக்கறி இறைச்சிக்கு தடை சட்ட திருத்தத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

பல இடங்களில் மாட்டுக்கறி சமைத்து உண்ணும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் புதிய சட்டதிருத்தம் குறித்து திராவிடர் கழக தலைவர் வீரமணி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பாரதியஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, நாய் கறி உண்ணும் போராட்டம் நடத்துங்கள் என்று அகங்காரமாக கூறி உள்ளார்.

நேற்று மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பிய, செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தம் குறித்து விமர்சிப்பவர்களுக்கு எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்தார்.

அப்போது  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி போன்றோர், தங்களது கண்டனத்தை  பதிவு செய்ய நாய்க்கறி உண்ணும் போராட்டத்தில்கூட ஈடுபடுங்கள் என்று கூறினார்.

எச்.ராஜாவின் இந்த அகங்கார பேச்சுக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

[youtube-feed feed=1]