மதுரை:
முக்கிய குற்ற வழக்குகளின் விசாரணையை வீடியோ-ஆடியோ பதிவு செய்யவேண்டும் என்று, அனைத்து நீதிமன்றங்களுக்கும், உயர்நீதி மன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
இதற்கான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு 3 மாதத்திற்குள் செய்து தர வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
வழக்குகள் தொடர்பாக நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் விசாரணைகளின் போது, முன்னர் ஒரு மாதிரியும், பின்னர் மாற்றி பேசி வருவதும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது, இதுபோன்ற சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக கருதப்படும் நிலையில், இவ்வாறு மாறுவதை தடுக்கும் வகையில் நீதிமன்றங்களில் விசாரணைகளின் ஆடியோ வீடியோ பதிவு செய்யப்படும் என்று அறிவுறுத்தி உள்ளது.
குறிப்பாக முக்கிய வழக்குகள், 10 ஆண்டுகளுககு மேல் தண்டனை அளிக்க கூடிய முக்கிய வழக்கு விசாரணைகளை வீடியோ, ஆடியோ பதிவு செய் வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள், மகளிர் நீதிமன்றங்களில் நடக்கும் விசாரணையையும் கட்டாயம் வீடியோ, ஆடியோ பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு சு ஏப்ரல் 1 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு தெரிவித்துள்ளது.