லண்டன்:

விமானங்கள் பெட்ரோல் மூலம் இயங்குகின்றன. இதனால் மிக அதிக செலவாகிறது. எனவே மாற்று எரிபொருளை மூலம் இயக்கும் நடவடிக்கையில் லுப்தான்சா, ஏர் பிரான்ஸ்- கே.எல்.எம் மற்றும் விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த 2015-ம் ஆண்டில் ஏர் பஸ் விமானம் பேட்டரிகள் மூலம் இயங்கும் எலக்ட்ரிக் விமானம் ஆக மாற்றப்பட்டது. ஆனால் இதில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். அதிகம் பேர் பயணம் செய்யும் வகையில் பெரிய விமானம் தயாரிக்க இங்கிலாந்தை சேர்ந்த ஈ.சி.ஜெட் விமான நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் செயல்படும் ரைட் எலக்ட்ரிக் நிறுவனத்தின் என்ஜினீயர்களும், பேட்டரி நிபுணர்களும் இணைந்து இத்தகைய முயற்சியில் ஈடுபட தொடங்கினர். அதன் விளைவாக 2 இருக்கைகளுடன் கூடிய பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் விமானம் தயாரிக்கப்பட்டு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. 335 மைல் தூரம் அந்த விமானம் பறந்தது.

பேட்டரியில் இயங்கும் பெரிய விமானம் மக்கள் பயன்பாட்டுக்கு வர இன்னும் 10 ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் எரிபொருள் மிச்சமாகும். மேலும் பலத்த ஒலி வெளியேறாது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.