சண்டிகர்:
பேப்பர் பை ஒன்றுக்கு ரூ.3 வசூலித்ததால், ரூ.9 ஆயிரம் இழப்பீடு தருமாறு பேட்டா நிறுவனத்துக்கு சண்டிகார் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நுகர்வோர் நீதிமன்றத்தில் சண்டிகரைச் சேர்ந்த தினேஷ் பிரசாத் என்பவர் அளித்த புகாரில், பேட்டா ஸ்டோரில் ஷு வாங்கியபோது, பேப்பர் பை-க்கு ரூ.3 வசூலித்தனர் என்று குறிப்பிட்டிருந்தார்.
புகாரை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், பொருளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பை வழங்க வேண்டியது நிறுவனத்தின் கடமை.
பணியில் குறைபாடு இருப்பது தெளிவாக நிரூபணமானதால், வாடிக்கையாளருக்கு இழப்பீடாக ரூ.4 ஆயிரமும், மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணைய சட்ட உதவி மையத்தின் கணக்கில் ரூ.5 ஆயிரமும் செலுத்த பேட்டா நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
Patrikai.com official YouTube Channel