சென்னை:
அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள கமல் அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இன்று சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது, தனது கட்சிக்கான பேஸ்மெண்ட்டை ஸ்டிராங்க போடணும், அதற்கு சில காலம் ஆகும் என கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்ததை தொடர்ந்து டிசம்பர் 31ந்தேதி அரசியலுக்கு வருவதாகவும், தனி அரசியல் கட்சி தொடங்கி அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்ற இணையதளத்தை மக்கள் மன்றம் என்று மாற்றி உள்ளார். கட்சிக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், மீண்டும் தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இன்று நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.
அப்போது ரசிகர்கள் மத்தியில் அவர் பேசியதாவது, நாம் தமது பணியை தொடங்க சில காலம் ஆகும். இது சாதாரண பில்டிங் கிடையாது. 32 ஃப்ளோர். 32 மாவட்டம், அதனால் ஃபவுண்டேஷனை ஸ்ட்ராங்காக போடனும்.
அரசியலில் எந்த விஷயத்தையும் கவனமாக கையாள்வது அவசியம் அடித்தளத்தை வலுவாக அமைக்க வேண்டும் என்பதால்தான் நாம் இந்த நிலையில் இருக்கிறோம் அனைத்து ரசிகர்களையும் ஒரே நேரத்தில் சந்திக்க சில நாட்கள் ஆகும்.
மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்; நாம் நமது வேலையை அமைதியாக பார்ப்போம் , ஒரு குடும்பம் நடத்தணும்னா குடும்பத்தலைவன் சரியாக இருக்கணும்; இந்த குடும்பத்தை பொறுத்தவரை நான் சரியாக இருக்கிறேன்.
விரைவில் உங்கள் அனைவரையும் உங்கள் மாவட்டத்தில் சந்திக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.