சென்னை:

மிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கருத்து தெரிவித்தும், அரசியலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், காவிரி பிரச்சினையில் தமிழக அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்தை வரவேற்பதாக கூறினார்.

ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடனான சந்திப்பின்போது, நாட்டில் சிஸ்டம் சரியில்லை.. போருக்கு தயாராக இருங்கள் என்று தனது ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். பின்னர் கடந்த டிசம்பர் இறுதியில் நடைபெற்ற ரசிகர்களுடனான சந்திப்ப தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார்.

இந்நிலையில், தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பை மீண்டும் தொடர்ந்து நடத்தி வருகிறார். இன்று நெல்லை மாவட்ட ரசிகர்களுடனான சந்திப்பின்போது அடித்தளம் ஸ்டிராங்கா போட வேண்டும் என்று தெரிவித்த அவர் அதற்கு சில காலம் ஆகலாம் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எனது ரசிகர்களுக்கு மற்றவர்கள் அரசியல் கற்றுத்தர வேண்டாம்; அவர்கள் மற்றவர்களுக்கு கற்றுத்தருவார்கள் என்று கூறினார்.

மேலும், கமலின் அரசியல் கட்சி அறிவிப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரஜினி,   கமல் அரசியல் பொதுக்கூட்டம் மிகவும் நன்றாக இருந்தது. அவர்  சிறப்பாக  செயல்படுவார் என்றும்,

நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் இருவரின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்வதே என்று கூறினார்.

மேலும், காவிரி பிரச்சினையில்,  தமிழக அரசின் அனைத்துக்கட்சி கூட்டம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை வரவேற்கிறேன் என்றும் கூறினார்.

காவிரிதீர்ப்பு பிரச்சினையில் நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.