உ.பி.: பரேலியில் 500, 1000 ரூபாய் கட்டுகள் தீ வைத்து எரிப்பு! (வீடியோ)

Must read

லக்னோ,
.பி.யில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் தீ வைத்து எரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எரிக்கப்பட்ட பணம் கருப்பு பணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தீ வைத்து எரிக்கப்பட்டிருப்பது, நாட்டு மக்களிடையே  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோடிக்கணக்கான ரூபாய் எரிக்கப்படும் காட்சி
கோடிக்கணக்கான ரூபாய் எரிக்கப்படும் காட்சி

உத்திரப்பிரதேசத்தின் பரேலியில், சி.பி.கஞ்ஜ் பகுதியிய்ல உள்ளற  பர்சா கேடா  சாலையோரம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளன. மூட்டை மூட்டையாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கொண்டு வந்து எரிக்கப்பட்டிருப்பதை ஏராளமானோர் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் எரிந்த ரூபாய் நோட்டுகளின் சாம்பலையும், எரிந்த ரூபாய் நோட்டுகளின் எஞ்சிய பகுதிகளையும் எடுத்துச் சென்றனர்.
எரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் துண்டுதுண்டாக கட் செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர். இதுகுறித்து ரிசர்வ் பேங்குக்கு தகவல் அளித்துள்ளதாகம் கூறினர்.
மற்றொரு இடத்தில் சாலையோரம் எரிந்துகொண்டு இருக்கும் நிலையில்
மற்றொரு இடத்தில் சாலையோரம் எரிந்துகொண்டு இருக்கும் நிலையில்

தீ வைத்து எரிக்கப்பட்ட ரூபாய் பல ஆயிரம் கோடிகளை தாண்டும் என கூறப்படுகிறது. இந்த பணம் கருப்பு பணமாக இருக்கலாம் என்று அந்த பகுதி மக்கள் கூறினர்.
இதனிடையே கான்பூரில் வணிகர்கள் ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்றனர்.  மாற்று ஏற்பாடு ஏதும் செய்யாமல் மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினர்.
burn-money
அதேபோல் அலுவலகத்தில் ஒருவர்  500 ரூபாய் நோட்டுகளை கையில் எடுத்து தீ வைத்து எரிக்கும் காட்சி வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
(அலுவலகத்தில் பணத்தை எரிக்கும் வீடியோ)
[KGVID]https://patrikai.com/wp-content/uploads/2016/11/REAL-VIDEO-Burning-Indian-500-1000-Rupees-notes.mp4[/KGVID]

More articles

Latest article