வாஷிங்டன்:  அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, “எ பிராமிஸ்ட் லாண்ட்” என்ற தலைப்பில்  தனது சுயசரிதை புத்தகம் எழுதி உள்ளார்.  இரு பகுதிகளாக உருவாக்கப்பட்டு, 768 பக்கங்கள்  கொண்ட முதல் பகுதி  வெளியிடப்படடுள்ளது.  அதில், ஒபாமாவின் இளமைக்கால வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, அரசியல் நிகழ்வுகள், அதிபராக இருந்தபோது நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள், சந்தித்த  உலகத் தலைவர்கள்,   அரசியல் கட்சித் தலைவர்கள்,ஒசாமா பின்லேடன்  கொல்லப்பட்டது என பன்முகத்தகவல்களை தனது நினைவுக்குறிப்பாக தொகுத்துள்ளார். மேலும் இந்திய தலைவர்கள், இந்தியாமீதான தனது கருத்து, இந்தியாவுக்கு விஜயம் செய்ததுகுறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அவரது புத்தகத்தில், தனது சிறுவயதில் இந்தியாவின் இந்துமத இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன். இந்தியாவைப் பற்றிய சிறந்த கற்பனை இருந்தது, மகாந்தா மாகாந்தி எனது சிந்தனையில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியவர்,  தனக்கு பல இந்தியா, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த நண்பர்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நிலையில், அவர் அமெரிக்க அதிபராக இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது,  சந்தித்த அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி குறித்தும் தனது நினைவலைகளை அவரது புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தியா குறித்து  அவர் குறிப்பிடுகையில், “மீண்டும் மீண்டும் ஆட்சி மாற்றங்கள், அரசியல் கட்சிகளுக்குள் கடும் சண்டைகள், பிரிவினைவாதிகளின் ஆயுதப்போராட்டங்கள், ஊழல் மோசடிகள் என எல்லாவற்றிலும் தப்பித்து பல அம்சங்களில் நவீன இந்தியா ஒரு வெற்றிக்கதையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது” என  தெரிவித்துள்ளார்.

அத்துடன்  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை வெகுவாக புகழ்ந்துள்ளார். “இந்திய பொருளாதார மாற்றத்தின் தலைமை சிற்பி மன்மோகன்சிங் என்று தெரிவித்துள்ளவர்,  சீக்கிய மத சிறுபான்மை வகுப்பில் இருந்து நாட்டின் பிரதமராக உயர்ந்தவர்.  அவர்  இந்தியாவின் முன்னேற்றத்தின் சின்னமாக திகழ்ந்தார்.  மன்மோகன் சிங், தனது சொந்த பிரபலத்தின் பலனாக பிரதமராகவில்லை என்றும், மக்களின் வாழ்க்கைத் தரங்களை உயர்த்தி, ஊழல் செய்யாததற்காக மக்களிடம் நற்பெயரை சம்பாதித்ததுடன், அதை தற்போதுவரை  பேணியும் வருகிறார்” என புகழாரம் சூட்டியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பற்றிய அவரது எண்ணத்தையும் அந்த புத்தகத்தல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்டிசியின் தலைவராக இருந்த  “சோனியா காந்தி பேசுவதை விட, கேட்பதில் ஆர்வம் காட்டுகிறார் என்று தெரிவித்திருப்பதுடன், அரசின்  கொள்கை விஷயங்களைப்பற்றி பேசுகிறபோதெல்லாம், அதை பிரதமர் மன்மோகன்சிங் வசம் தள்ளி விடுவதில் கவனமாக இருந்தார்” என்றும் தெரிவித்து உள்ளார்.

ஒபாமாவின் ‘எ பிராமிஸ்டு லேண்ட்’  உலகம் முழுவதும் பரபரப்பாக விற்பனையாகி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.