நியூயார்க்:

மெரிக்க வரலாற்றிலேயே “ஆப்ரிக்க அமெரிக்க” இனத்தைச் சேர்ந்த முதல் அதிபர் என்ற பெருமையைப் பெற்றவர் ஒபாமா. ஒட்டுமொத்த உலகத்தையும்.. குறிப்பாக, அமெரிக்காவையும் நடுங்கவைத்த ஒசாமா பின் லேடனை தேடிக்கண்டுபிடித்து அழித்தவர் இவர். ஆகவே, அமெரிக்க மக்கள் இவரை, ஹீரோவாக கொண்டாடினார்கள். ஆகவே இரண்டாவது முறையாகவும் அதிபர் ஆனார்.

அமெரிக்க விதிமுறைகளின்படி, இருமுறை மட்டுமே ஒருவர் அதிபர் பதவி வகிக்க முடியும். ஆகவே இவரது கட்சி சார்பாக ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வியடைந்தார்.

எனினும் ஒபாமா மீது அமெரிக்கர்கள் வைத்திருக்கும் அபிமானம் குறையவே இல்லை என்கிறது ஒரு சர்வே. இந்த நிலையில் புத்தக  நிறுவனம் ஒன்று ஒபாவிடம், வாழ்க்கை வரலாறை எழுதச்சொல்லி கேட்டது. இதற்கான பேச்சுவார்த்தை முடிந்து கடந்தவாரம்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாராம் ஒபாமா.

இந்த கையெழுத்தின் மதிப்பு 400 கோடி ரூபாய்.

ஆமாம்…  புத்தகம் எழுதுவதற்காக அந்த நிறுவனம், ஒபாமாவுக்கு 60 மில்லியன் டாலர்கள்  அளிக்க இருக்கிறது. இது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 400 கோடி  ரூபாய்!

கடந்த 2004ல் பில் கிளிண்டன் தனது வாழ்க்கை வரலாற்றை எழுத, புத்தக நிறுவனம் ஒன்றிடமிருந்து  15 மில்லியன் டாலர் பெற்றார். அதுதான் இதுவரையில் அமெரிக்க அதிபர் ஒருவருக்கு அளிக்கப்பட்ட அதிகபட்ச தொகையாக இருந்தது.

அந்த சாதனையை இப்போது உடைத்துவிட்டார் ஒபாமா!