சென்னை:
விதியை மீறி வைக்கப்படும் பேனர்கள்மீது நடவடிக்கை எடுக்கா தமிழக அரசு மற்றும் அதிகாரி களை கடுமையாக சாடிய சென்னை உயர்நீதி மன்றம், அதிகாரிகள் சாலையில் செல்கிறார்களா..? ஹெலிகாப்படரில் செல்கிறார்களா? என்று சாட்டைய சுழற்றியது.
மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் விதிகளை மீறி வைக்கப்படும் பேனர்கள் தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருக்கும் நிலையில், அதை கடைபிடிக்காமல் அலட்சியம் செய்யும் தமிழக அரசு மற்றும் அதிகாரிகள் மீது கடுமையாக சாடி உள்ளது.
இந்த நிலையில், கோவை ஆர்.எஸ் புரத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்ச்சிக் காக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோரை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டன.
இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்திய நாராயணன், நிர்மல்குமார் அமர்வு முன்பு டிராபிக் ராமசாமி முறையிட்டார். அப்போது, கோவையில், விதிமுறைகளை மீறி பேனர் வைக்கப்பட்டுள்ளது என வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து வழக்கு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்,விதிகள் மீறி வைக்கப்படும் பேனர்களை அகற்ற 8 வருடங்களுக்கு முன்பே நீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளதாகவும், ஆனால், தமிழக அரசு அதை முறையாக அமல்படுத்தவில்லை என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
விதி மீறிய பேனர் விவகாரத்தில், இதுவரை அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து, அரசிடம் கேட்டு சொல்வதாக கூறுவதற்கு எதற்கு அரசு வழக்கறிஞர் என்று நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர்.
நீதிமன்ற உத்தரவை அரசு நடைமுறைப்படுத்தாமல் இருந்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அளவில்லா நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இருப்பதாகவும் நீதிபதிகள் கூறினர்.
விதிமீறல் பேனர்கள் மீது நவடிக்கை எடுக்காத அதிகாரிகள் சாலையில் செல்கிறார்களா..? அல்லது ஹெலிக்காப்டரில் செல்கிறார்களா..? என்று கடுமையாக சாடிய நீதிபதிகள், இந்த முறையீடை வழக்கை மனுவாக தாக்கல் செய்ய டிராபிக் ராமசாமிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.