சென்னை

திமுக பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீ கனடாவில் முதுகலை படிப்பு தகுதித் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

சென்னையில் உள்ள குரோம்பேட்டை பவானி நகரைச் சேர்ந்த பெண் பெண் பொறியாளர் சுபஸ்ரீ பேனர் விழுந்த விபத்தில் பரிதாபமாக மரணம் அடைந்தார்.  சுபஸ்ரீ ஏற்கனவே. பிடெக் படிப்பு முடித்திருந்தார்.   அவர் முதுகலை படிப்பைக் கனடாவில் படிக்க முடிவு செய்து கடந்த 7 மற்றும் 10-ம் தேதி சென்னை பிரிட்டிஷ் கல்லூரியில் ஐஐஇடி தகுதித் தேர்வு எழுதியிருந்தார்.

இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே கனடா படிப்பிற்குத் தேர்வாக முடியும் என்பதால் தேர்வு முடிவுக்காகக் காத்திருந்த நிலையில் சுபஸ்ரீயின் எதிர்பாரத மரணம் அவருடைய குடும்பத்தினரைப் பாதித்தது.

சுபஸ்ரீயின் குடும்பத்தினரின் துயரை அதிகரிக்கும் வகையில் அவர் வீட்டிற்கு வந்த கொரியரில் சுபஸ்ரீ இந்தத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றது தெரியவந்துள்ளது.   அவர் தேர்வில் 9 மதிப்பெண்களுக்கு 7 மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளது தெரிய வந்தது.

இத்தகவலை அறிந்த சுபஸ்ரீயின் பெற்றோர் இதைப் பார்க்க மகள் இல்லையே எனக் கூறி கண்கலங்கினர். அத்துடன் சுபஸ்ரீ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதால் உதவித்தொகையுடன் கூடிய மேல்படிப்பு படித்திருப்பார் எனக் கூறி அவரது பெற்றோர்கள் கதறி அழுதது காண்போர் மனதை உருக்கியது.