டில்லி,

ங்கிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் சேமிப்பு கணக்கின் வட்டியை 4 சதவிகிதத்தில் இருந்து மூன்றரை சதவிகிதமாக குறைத்துள்ளது மத்திய அரசு.

சாமானிய மக்களின் தலையில் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகள் காரணமாக சுமையை ஏற்றி வரும் மத்தியஅரசு, தற்போது வங்கிகளில் பயன்படுத்தும் சேமிப்பு கணக்குக்கான வட்டியை குறைத்து, மீண்டும்  ஏழைகளின் வயிற்றில் அடித்து தனது உண்மையான  முகத்தை காட்டியுள்ளது மத்திய அரசு.

பொதுத்துறை வங்கிகள் அனைத்திலும் சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இனிமேல் சேமிப்புக் கணக்குகள் மீதான வட்டி இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.

அதில் ரூ.4 கோடி மற்றும் அதற்கு கீழ் சேமிப்பு கணக்கில் பணம் சேமிப்பவர்களுக்கு மூன்றரை சதவிகிதம் வட்டி என்றும்,

சேமிப்பு கணக்கில் 4 கோடி ரூபாய்க்கு மேல் பணம் சேமிப்பவர்களுக்கு 4 சதவிகிதம் வட்டி என்றும் கூறி உள்ளது.

நாட்டில் சாமானிய மக்கள் சேமிப்பு கணக்குகளையே வைத்துள்ளனர். பொதுவாக யாரும் சேமிப்பு கணக்கில் அதிகளவு பணம் வைத்திருப்பது இல்லை. சாமானிய மக்களின் கணக்கில் எப்போது சிறிதளவு பணமே சேமிப்பாக இருக்கும். இந்நிலையில், மத்தியஅரசு தற்போது வட்டியை குறைத்து, சாமானிய மக்களின் வயிற்றில் மேலும் அடித்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில், மத்தியஅரசு பணமதிப்பிழப்பு  அறிவித்தபோது, சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் குறையும் என்று  புளும்பெர்க் நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் இந்தியா, பணமில்லா பரிவர்த்தனை போன்ற மக்கள் விரோத அறிவிப்புகள் காரணமாக ஏழை மக்களின் விரோதி பாரதியஜனதா என்று தொடர்ந்து நிரூபித்து வருகிறது பாரதியஜனதா.