கோயமுத்தூர்:
ந்துமுன்னணியை சேர்ந்த சசிகுமார் கொலை செய்யப்பட்டதை அடுத்து நடைபெற்ற வன்முறையில் ஈடுபட்டது வங்கதேசத்தினர் என்று சொல்கிறார் பாரதியஜனதா எச்.ராஜா.
raja-h
கோவையில் இந்து முன்னணி சசிக்குமார் இறுதி ஊர்வலத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா நேற்று கோவை வந்தார். மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் வீட்டுக்கு சென்று, அவரது  குடும்பத்தாரை  சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தீவிரவாதத்தின் புகலிடமாக தமிழகம் இருக்கிறது. இந்து இயக்க பிரமுகர்கள் கொலை செய்யப்பட்ட எந்த வழக்குகளிலும் இதுவரை எ குற்றவாளிகளை போலீஸார் கைது செய்யவில்லை. தமிழக காவல்துறை பாரபட்சமாக செயல்படுகிறது.
kvai
எனவே இந்து இயக்க பிரமுகர்கள் கொலை செய்யப்பட்ட வழக்குகளை தேசிய புலனாய்வு முகமையிடம் மாநில அரசு ஒப்படைக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், பாஜக சார்பில் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.
மேலும்,  சசிக்குமார் கொலை மற்றும் அதையொட்டி நடந்த வன்முறை தொடர்பாக உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும்,
சசிக்குமார் இறுதி ஊர்வலத்தில் வன்முறையை ஏற்படுத்தியது வங்கதேசத்தைச்  சேர்ந்தவர்கள்தான்  என்று அதிரடியாக கூறினார்.
மேலும் தமிழகத்தில் பாஸ்போர்ட் இல்லாமல்  தங்கி இருக்கும் வங்கதேசத்தினரை கைது செய்ய வேண்டும் என்றும்,  வன்முறையில் ஈடுபட்டதாக கோவை பகுதியை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட இந்துக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.