பெங்களூரு

ர்நாடகா சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரதமர் நடத்தும் ரோட்ஷோவில் கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.   கருத்துக் கணிப்புக்களின்படி இம்மாநிலத்தை ஆளும் பாஜகவுக்கு தோல்வி முகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.   இதையொட்டி பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைத்து மத்திய அமைச்சர்களும் களமிறங்கி உள்ளனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு பகுதியாகப் பிரதமர் மோடி 40 கிமீ தூரத்துக்கு ரோட் ஷோ ஒன்றை நடத்த உள்ளார்.  பெங்களூருவில் பிரதமர் மோடியின் 40 கிமீ தேர்தல் ரோட்ஷோவில் பெங்களூரு குடிமக்களுக்கு காவல்துறை பல அதிர்ச்சி கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

மொட்டை மாடி மற்றும் மேல்மாடங்களில் பார்ப்பது மற்றும் கூடுவது செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது

பேரணி முடியும் வரை வாகன போக்குவரத்து நிறுத்தப்படும்.

கட்டிடத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள் மூடப்படும்

கட்டிட வளாகத்தில் ‘அங்கீகரிக்கப்படாத’ நபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்

பேரணியைப் பார்க்க விரும்புவோர் கண்டிப்பாகப் பார்க்கப்படும் பகுதிக்கு வர வேண்டும்

இந்த கட்டுப்பாடுகளால் மக்கள் பிரதமர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். 

பெங்களூரு மக்கள்,  

”சர்வாதிகாரத்திற்கு வெவ்வேறு வரையறைகள் உள்ளன.  அதில் இதுவும் ஒன்றாகும்.  ரோட்ஷோ நடைபெறும் தினத்தன்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வுக்கு தங்கள் எழுதும் இடத்திற்குச் செல்வதற்கு பெரும் சிரமமாக இருக்கும். இதனால் பெற்றோர்கள் கவலையில் உள்ளனர்.”

எனத் தெரிவித்துள்ளனர்.