பெங்களூர்,
atm-machine
பெங்களூருவில் ஏ.டி.எம். இயந்திரங்கள் மூலம் தங்க காசுகள் விற்பனையை தனியார் நகை நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
தங்க நகைகளை ஏ.டி.எம். இயந்திரங்கள் மூலம் விற்கும் புதிய முயற்சியில் ஆன்லைன் மூலம் தங்க நகைகள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று இறங்கியுள்ளது.
பெங்களூருவில் நிறுவப்பட்டுள்ள இந்த மையத்தில் பணத்தை நேரடியாகவோ அல்லது ஏ.டி.எம். கார்டு மூலமாகவோ செலுத்தி நகைகளை பெற்றுக்கொள்ள லாம்.
நகையோடு நகையின் தூய்மை மற்றும் உறுதி தன்மை குறித்த சான்றிதழை யும் ஏ.டி.எம். இயந்திரம் வெளியிடுகிறது.
கர்நாடகாவைச் சேர்ந்த புளுஸ்டோன் என்ற ஆன்லைன் தங்க விற்பனை நிலையம் தீபாவளி பண்டிகையை குறிவைத்து இந்த விற்பனை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
coins
இதுகுறித்து, புளுஸ்டோன் அதிகாரி,அரவிந்த் சிங்கால், கூறும்போது, இந்த ஏடிஎம் மெஷினில் 1 கிராம் தங்க காசு முதல் 20 கிராம் தங்க காசு வரை கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அன்றைய விலை நிலவரத்து கேற்ப விற்பனை செய்யப்படும் என்றும் கூறினார்.
இந்த ஏடிஎம் மூலம் தங்கம் விற்பனை செய்வது வெற்றி பெற்றால், மேலும் பல இடங்களிலும், மற்ற மாநிலங்களிலும்  இதுபோன்ற ஏடிஎம் இயந்திரங்களை நிறுவ முடிவு செய்துள்ளோம் என்றார்.
இந்த ஏடிஎம் மூலம் தங்க காசு வாங்கிய பெண் ஒருவர் கூறும்போது, இது மிகவும் எளிதாகவும், சவுகரியமாகவும் உள்ளது. இதனால் கடைகளுக்கு செல்லும் நேரம் மிச்சம்  என்றார்.