கொரோனாவால் முற்றிலும் முடங்கிய தொழில்களில் சினிமா துறையும் ஒன்று.
கடன் வாங்கி படம் எடுக்கும் கேரள மாநில திரைப்பட தயாரிப்பாளர்கள், ஊரடங்கினால் நொந்து நூலாகி விட்டனர்.
சூப்பர் ஸ்டார்கள் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்கள் சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொண்டால் மட்டுமே இனிமேல், படம் தயாரிப்போம் என கேரள சினிமா தயாரிப்பாளர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து விவாதிக்க மலையாள சினிமா நடிகர்கள் சங்க ‘(அம்மா’) கூட்டம் கொச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.
அந்த ஓட்டல் அமைந்துள்ள சக்கரப்பரம்பு , கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள இடம் ஆகும்.
இதனால் அங்கு நடிகர் சங்க கூட்டம் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், நடிகர்களிடம் இந்த விஷயத்தை தெரிவித்தனர்.
இதையடுத்து கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அந்த ஓட்டல் உடனடியாக இழுத்து மூடப்பட்டது.
இந்த கூட்டத்தில், தங்கள் ஊதியத்தை பாதியாக குறைத்துக்கொள்ள நடிகர்கள் ஒத்துக்கொண்டதாக தெரிகிறது.
-பா.பாரதி