இலங்கையில் படுகொலை செய்யப்ட்ட தமிழர்களுக்கு கடற்கரையில் நினைவேந்தலுக்கு தடைவிதித்தால் கடற்கரையிலுள்ள எம்ஜிஆர் சமாதியில் அஞ்சலி செலுத்தவரும் அதிமுகவினருக்கு தடைவிதிக்க வேண்டுமென்றும் இயக்குனர் கெளதமன் தெரிவித்துள்ளார்.

மே17 இயக்கம் சார்பில் கடந்த 21 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கைது செய்யப்பட்ட மே17 இயக்கத்தை சேர்ந்த 17 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தியிம், மத்திய மாநில அரசுகளின் அடக்குமுறையை கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

இக்கூட்டத்தில் பேசிய இயக்குனர் கெளதமன்,‘‘பண்டிக்கை என்ற பெயரில் கடற்கரையில் ஊர்வலத்திற்கு அனுமதி தரும் அரசு , தலைவர்களின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த கட்சியினரை அரசு இனபடுக்கொலை செய்யப்டு தமிழர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த மறுப்பது ஏன் யென கேள்வி எழுப்பியுள்ளார். அடுத்தாண்டு ராணுவத்தை வைத்து தடை செய்தாலும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தேறும்’’ என்றார்.

இந்த கண்டன ஆர்பாட்ட கூட்டத்தில் தமிழின ஆர்வலர்கள், மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா,இயக்குனர் கவுதமன்,அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும்,தமிழக காவல்துறையை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்..