திருநெல்வேலி

விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கியதாக தொட்ரப்பட்ட் வழக்கில் பவ்வீர் சிங்கிற்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களைப் பிடுங்கி சித்ரவதை செய்ததாக உதவி காவல்துறை சூப்பிரண்டு பல்வீர்சிங் உள்பட 14 பேர் மீது புகார் கூறப்பட்டது  துணை ஆட்சியர் இது குறித்து விசாரணை நடத்தினார்.

பிறகு அரசு முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் 4 வழக்குகள் பதிவு செய்தனர்.   ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு சில காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இன்று குற்றம் சாட்டப்பட்ட ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் உள்பட 14 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகச் சம்மன் அனுப்பப்பட்டது. இன்று திருநெல்வேலி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.1-ல் நீதிபதி திரிவேணி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

குற்றம் சாட்டப்பட்ட ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் உள்பட 14 பேரும் நேரில் ஆஜராகினர்., இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்னாள் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங், ஆய்வாளர் ராஜகுமாரி ஆகிய 15 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.