டில்லி:
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்படும் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக எல்லையோர கிராம மக்கள் தங்கள் உடைமைகளுடன் பாதுகாப்பான இடம் நோக்கி  செல்லத்தொடங்கி உள்ளனர்.
indiapigeonballoonpaktoindia
நேற்று இந்திய எல்லை அருகே இரண்டு பலூன்கள் பறந்து வந்தன. . அவற்றில்  ‘பாகிஸ்தான் பழி வாங்கும்’ என்ற வாசகம் உருது மொழியில் எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று ஒரு புறா எல்லைப்பகுதி அருகே பறந்து வந்தது.   அந்த புறாவை பிடித்து சோதித்து பார்க்கையில் அதன் காலில் ஒரு கடிதம் இருந்தது. . அதை பிரித்து பார்த்தபோது அதில்,
images
‘‘மோடி ஜி, 1971-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரின்போது இருந்த அதே மக்கள் நாங்கள் என்று கருத வேண்டாம். தற்போது ஒவ்வொருவரும் மற்றும் ஒவ்வொரு குழந்தையும் இந்தியாவை எதிர்த்து சண்டையிட தயாராக இருக்கிறோம்’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
balloon-pakistan-story_647_100216085909
நேற்று இரண்டு பலூன்கள் மூலம் மிரட்டல் வந்துள்ள நிலையில், இன்று புறா மூலம் வந்த மிரட்டல் கடிதம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த காலத்தில் புறா மூலம் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டு மன்னருக்கு  ஓலைச்சுவடி  மூலம் செய்திகள் அனுப்புவதுபோல தற்போது புறா மூலம் மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டு உள்ளது.