சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக பால்கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கட்சியின் அடிப்படை விவசாய அமைப்பிலிருந்து படிப்படியாக முன்னேறி இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அக்கட்சியின் மாநில மாநாடு தூத்துக்குடியில் இன்று நடந்தது. இதில் தேசிய தலைவர்கள், மாநில தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் தமிழ் மாநில செயலாளராக பாலகிருஷ்ணன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கட்சியினர், தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
விவசாயிகள் சங்கத்தலைவர், சிறந்த பேச்சாளர், சட்டமன்றத்தில் வாதத்தை திறம்பட வைத்தவர், எளிமையானவர், விஷயம் தெரிந்தவர், விஷயத்தை நேரடியாக கூறக்கூடியவர், பூசி மழுப்பி பேசத் தெரியாதவர் என்று இவருக்கு பல சிறப்பு அம்சங்களை கொண்டவர் என்று கட்சியினர் தெரிவித்துள்ளனர்.