போபால்:

பாகிஸ்தானின் பாலக்கோட்டில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதால் எந்த பயனும் இல்லை. ஜம்மு காஷ்மீரில் வன்முறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என விஸ்வ இந்து பரிஷத் இயக்கத் தலைவர் பிரவீன் தொக்காடியா தெரிவித்துள்ளார்.


செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்திய விமானப் படை பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாமை அழித்ததால் எந்தவித பலனும் இல்லை.
ஜம்மு காஷ்மீரில் கலவரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பிரதமர் மோடி வலுவற்ற தலைவராக இருப்பதால், தீவிரவாதிகளின் தாக்குதலை நிறுத்தமுடியவில்லை.

கடந்த 1971-ம் ஆண்டு நடந்த இந்திய- பாகிஸ்தான் போரால், அந்நாட்டிலிருந்து பிரிந்து சென்று பங்களாதேஷ் உருவானது. அப்போதிருந்த நாட்டின் தலைமையை பாராட்டுகின்றேன்” என்றார்.