சென்னை:
கொரோனா தொற்று பரவி வருவதால் பக்ரீத் பண்டிகையின்போது, பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது.

பக்ரித் பண்டிகை தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் ‘‘கொரோனா தொற்று பரவி வருவதால் பக்ரீத் பண்டிகையின்போது பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது’’ என்று தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் மதத் தலைவர்கள் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் செனனைய உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை தியாகத் திருநாள் எனும் பக்ரித் பண்டிகை.
இந்த பண்டிகையை இறைத்தூதர் இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

 

முஸ்லீம்களின் ஐந்து கடமைகளில் ஒன்று ஹஜ் புனித யாத்திரை செல்வதாகும். இந்த கடமைகளில் கடைசியானது இறைவனுக்கு பலியிடுதலாகும்.

இஸ்லாமியர்களுக்கான நாள் காட்டியில் வரக்கூடிய ஹஜ் மாதம் பத்தாம் நாள் இந்த புனித நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் நடைபெறக்கூடிய சிறப்பு தொழுகைக்குப் பின்னர் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டு கொடுக்கப்படுகிறது.

இந்த தியாகத் திருநாள் அரேபியா பதமான ஈத் அல்-அதா என அழைக்கப்படுகிறது. இதனை தமிழகத்தில் ஆடு பலிடுவதை அடிப்படையாக வைத்து பக்ரித் அதாவது பக்ரித் ஈத்-அல்-தா பெருநாள் என அழைக்கப்படுகிறது.