சென்னை: தமிழகத்தில் வரும் 21-ம் தேதிபக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
பக்ரீத் எனப்படும் ஈகைத் திருநாள் முஸ்லிம்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகையாகும். இஸ்லாமியார்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து இது கொண்டாடப்படுகின்றது. ரமலான் பெருநாள் என்றும் இது அழைக்கப்படுகின்றது. ஈத் என்னும் அரபுச் சொல்லுக்கு கொண்டாட்டம் அல்லது திருநாள்/பெருநாள் என்பது பொருளாகும். இறைத் தூதரான நபியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், 12-வது மாதமான துல்ஹஜில் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை குறித்து அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்து உள்ளார். அதன்படி, ”துல் ஹஜ் மாதத்துக்கான புதிய பிறை ஜூலை 11-ல் (நேற்று) தென்பட்டது.இதையடுத்து, பக்ரீத் பண்டிகை வரும் 21-ம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படும்” என்று அறிவித்துள்ளார்.