இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவராக உள்ளார். தற்போது 71 வயதாகும் இம்ரான்கான், 2018 முதல் ஏப்ரல் 2022, வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானின் பிரதமராகப் பதவி வகித்தார்.
தன்னுடைய பதவிக் காலத்தில் வெளிநாட்டுத் தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசுப் பொருட்களை அரசுக் கருவூலத்தில் ஒப்படைக்காமல் முறைகேடாக விற்று சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பளித்தது.
தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் ய்ர்நீதிமன்றம் இம்ரான்கானுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்து, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. ஆயினும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கைது செய்யப்பட்டார்.
இதையொட்டி தொடர்ந்து சிறையில் இருந்து வந்த சூழலில் ஜாமீன் கோரி அவரது தரப்பில் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இதே வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரோஷி சார்பிலும் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
நேற்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. . அதாவது, இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள். இருவரும் தலா ரூ.10 லட்சம் பிணைத் தொகை செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்க்னவே மேலும் சில வழக்குகள் உள்ளதால் இம்ரான்கான் விடுவிக்கப்படுவாரா என்பது சந்தேகமாக உள்ளது.