பாகுபலி 2’ டிரைலர் முன்கூட்டிய சமூக வலைதளங்களில் வெளியீடு! படக்குழு அதிர்ச்சி

‘பாகுபலி 2’ படத்தின் டிரெய்லர் முன்கூட்டியே சமூக வலைதளத்தில் லீக் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரபைல டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா நடித்த படம் ‘பாகுபலி’. ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து இந்த படம் சாதனை படைத்தது.

இதன் இரண்டாம் பாகமான ‘பாகுபலி 2’, அடுத்த மாதம் 28ம் தேதி திரைக்கு வருகிறது. நான் மொழிகளில் இந்த படம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென காலை 9 மணிக்கெல்லாம் இணையதளத்தில் மலையாள  மொழியிலான டிரைலர் டிரெய்லர் வெளியானது. திருட்டுத்தனமாக யாரோ இதை லீக் செய்துவிட்டார்கள்.

இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு உடனடியாக மற்ற  மொழிகளின் டிரெய்லரையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

சமூக வலைதளத்தில் டிரைவல் லீக்கானதால் படக்குழு கடும் அதிர்ச்சி அடைந்தது.  இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த படக்குழு மற்ற மொழி டிரைலர்களையும் உடனடியாக வெளியிட்டது.

இதையடுத்து படக்குழு அதிர்ச்சி அடைந்தது. உடனே தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவான இதன் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது.

தியேட்டர்களிலும் நேற்று முதல் இப்படத்தின் டிரெய்லர் ஒளிபரப்பானது.

இது குறித்து ராஜமவுலி கூறும்போது, ‘பேஸ்புக்கில் பதிவிடும்போது ஏற்பட்ட தவறு காரணமாக டிரெய்லர் லீக் ஆகியுள்ளதாக தெரிகிறது.

இந்த தவறை செய்தது யார் என தெரியவில்லை. யார் மீதும் நாங்கள் குற்றம் சொல்ல விரும்பவில்லை. இது எப்படி நடந்தது என விசாரித்து வருகிறோம்.


English Summary
Bahubali 2 'Trailer To Released Early in social networking Sites!