ஆசிய பேட்மின்டன்: 2 வது சுற்றில் சிந்து

Must read

Badminton Asia Championship: PV Sindhu, Ajay Jayaram move to second round

 

ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றார். சீனாவில் நடைபெறும் இந்த தொடரின் முதல் சுற்றில் இந்தோனேசியாவின் தினார் தியா அயுஸ்டைனுடன் நேற்று மோதிய சிந்து 21-8 என்ற கணக்கில் முதல் செட்டை எளிதாக கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் தினார் தியா கடுமையாகப் போராடி நெருக்கடி கொடுத்த நிலையில், பதற்றமின்றி செயல்பட்ட சிந்து 21-8, 21-18 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 31 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

மற்றொரு முதல் சுற்றில் களமிறங்கிய சாய்னா நெஹ்வால் 21-19, 16-21, 18-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் சயாகா சடோவிடம் 1 மணி, 8 நிமிடம் போராடி தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 21-18, 18-21, 21-19 என்ற செட் கணக்கில் சீனாவின் டியான் ஹூவெய்யை வீழ்த்தி 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரணவ் ஜெர்ரி சோப்ரா – சிக்கி ரெட்டி, மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் அஷ்வினி பொன்னப்பா – சிக்கி ரெட்டி, ஆண்கள் இரட்டையர் பிரிவில் மனு ஆத்ரி – சுமீத் ரெட்டி ஜோடிகள் தோல்வியை தழுவி ஏமாற்றமளித்தன.

More articles

Latest article