இயக்குநர் சசியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ‘பேச்சிலர்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார் .

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்து வருகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்தை ‘ராட்சசன்’ தயாரிப்பாளர் தில்லி பாபு தயாரித்து வருகிறார்.

படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.இந்த படத்தின் ஆடியோ உரிமையை பிரபல ஆடியோ நிறுவனமான திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இப்படத்திற்கு முதலில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில், திடீரென இசையமைப்பாளரை மாற்றி உள்ளனர். ஜி.வி.பிரகாஷுக்கு பதிலாக திபு நினன் தாமஸ் ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே மரகத நாணயம், கனா ஆகிய தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திபு நினன் தாமஸ் இசையில் முதல் பாடல் விரைவில் வெளியிடப்படும் என ‘பேச்சிலர்’ படக்குழு அறிவித்துள்ளது.