விஷால் தயாரித்து நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தற்காலிகமாக ‘விஷால் 31’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்குகிறார். விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி ஒப்பந்தமாகியுள்ளார் .
இதில் யோகி பாபு, அகிலன், ரவீனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
அனைத்துத் தரப்பு மக்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக உருவாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, என்.பி. ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். எஸ்.எஸ். மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு படப்பிடிப்புகள் தடைபட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் படப்பிடிப்புகள் துவங்கப்பட்டுள்ளன. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து விஷால் 31 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் துவங்கியுள்ளது.
இந்நிலையில் விஷாலுக்கு வில்லனாக மலையாள நடிகர் பாபுராஜ் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு முன்னதாக ‘ஜனா’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ ஆகிய படங்களில் பணிபுரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.