டில்லி:

பாபர் மசூதி வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

தேவைப்பட்டால் பாபர் மசூதி பிரச்னையைத் தீர்க்க உதவுவேன் என்றும் தலைமை நீதிபதி கேஹர் கூறியுள்ளார்.

1992ம் ஆண்டு உ.பி.யில் பாரதியஜனதா ஆட்சியின்போது சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் இருந்ததாக கூறப்பட்டது.  ராமர்கோவிலை இடித்துவிட்டுதான், முகலாயர் ஆட்சி காலத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதாக சர்ச்சை ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து பாபர்மசூதி இந்துத்வா  கரசேவகர்களால் இடித்து தள்ளப்பட்டது. அதைத்தொ டர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக உ.பி.யில் நடைபெற்று வந்த  கல்யாண்சிங்கின் பாரதிய ஜனதா ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு குறித்த விசாரணை இன்று உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றது. அப்போது,  தலைமை நீதிபதி இந்த பிரச்சினையை நீதி மன்றத்துக்கு வெளியே பேசி தீர்ப்பதுதான் நன்றாக இருக்கும் என்றும், இது மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினை என்று கூறினார். தேவைப்பட்டால் மத்தியஸ்தம் செய்ய உச்சநீதி மன்றம் தயார் என்றும் கூறினார்.