சென்னை: ரஜினியின் பாபா, பிதாமகன் உள்பட பல்வேறு திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் வி.ஏ.துரை, திரைப்பட தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், கடும் பாதிப்புக்குள்ளான நிலையில், தற்போது உடல்நலம் பாரிக்கப்பட்டு உள்ளார். அவரது சிகிச்சைக்கு உதவும்படி திரைப்பட துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் பிலபல படத்தயாரிப்பாளராக வலம் வந்தவர் விஏ.துரை. இவர் ரஜினி நடித்த பாபா படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக இருந்தவர். பின்னர் எவர்கிரின் மூவிஸ் என்ற பெயரில் தனி தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல படங்களை தயாரித்துள்ளார்.

குறிப்பாக பாலா இயக்கத்தில் உருவான பிதாமகன், விஜயகாந்தின் கஜேந்திரா, நாய்க்குட்டி, வெவரமான ஆளு, லவ்லி, லூட்டி, என்னம்மா கண்ணு என பல படங்களை தயாரித்துள்ளார்.

இவரது சில படங்கள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதால், தான் சம்பாதித்த பணம், பொருட்களை இழந்து, தற்போது ஏழ்மை நிலையில், காலத்தை ஓட்டவே தத்தளித்து வருகிறார். ஏற்கனவே நீரழிவு நோயினால் பாரிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வி.ஏ.துரை, தற்போது மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் கஷ்ட்டப் பட்டு வருகிறார். திரையுலகினர் உதவி கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தயாரிப்பாளர் வி,.ஏ.துரையினால் வாழ்வில் உயர்ந்துள்ள நடிகர்கள் மற்றுத் திரையுலகினர் அவரது சிகிச்சைக்கு உதம்படி வேட்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.