லக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த எஸ்எஸ் ராஜமௌலியின் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் (bahubali 2) பிரமாண்டமாய் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த படம்  இந்தியாவில் மட்டும் 6500 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைக்க காத்திருக்கிறது.  இந்தியாவில் இவ்வளவு அதிகமான தியேட்டர்களில்  வெளியாகும் முதல் திரைப்படம் ‘பாகுபலி-2’

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது பாகுபலி-2.

ஏற்கனவே பாகுபலி-2 படத்தின் டிரைலர் கடந்த 16ந்தேதி வெளியிடப்பட்டது.

இந்த டிரைலர் 48 மணி நேரத்தில் 65 மில்லியன் முறை பார்க்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ரயீஸ் படத்தின் டிரைலர், 24 மணி நேரத்தில் 20.8 மில்லியன் முறை பார்க்கப்பட்டிருந்ததே சாதனையாக இருந்தது.

இந்த சாதனையை தற்போது பாகுபலி-2 டிரைலர் முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.

பாகுபதி-2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாக உள்ளதால், அதற்குள் மேலும் பல சாதனைகள் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.