சென்னை:
அழகுமுத்துக்கோன் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முத்துக்கோனின் 266-வது பிறந்த நாளை யொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அழகு முத்துக்கோன் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதுக்குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நிலத்தின் தலைவணங்கா வீரத்துக்கும் தலைசான்ற தியாகத்துக்கும் தன்னிகரற்ற அடையாளமாக விளங்கும் மாவீரர் அழகு முத்துக்கோனின் பிறந்தநாள். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இந்தியாவின் பல பகுதிகளும் கிளர்ந்தெழுவதற்கு முன்பே அதைச் செய்து, விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த அழகு முத்துக்கோனின் வாழ்வும் போராட்டமும் என்றும் புகழ்மங்காது ஒளிவீசிடும்! என்று பதிவிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel