சென்னை: ஆயுர்வேததா, யுனானி, சித்தா, ஓமியோபதி படிப்புகளான ஆயுஷ் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் நாளை (22ந்தேதி) தொடங்கி உள்ள நிலையில், இன்று ஆயுஷ் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு ளள்து.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆயுஷ் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை http://tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதன்படி, பி.எஸ்.எம்.எஸ்.(BSMS), பி.ஏ.எம்.எஸ். (BAMS), பி.யு.எம்.எஸ்.(BUMS), பி.எச்.எம்.எஸ்.(BHMS), ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படு கின்றன. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அக்டோபர் 12-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு செப்டம்பர் 22 முதல் விண்ணப்பிக்கலாம்….