சென்னை: ஆயுதபூஜையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், பொதுமக்கள் வசதிக்காக நாகர்கோவிலுக்கு  சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில், ஆயுத பூஜையையொட்டி நான்கு நாட்கள் தொடர் விடுமுறை  வருகிறது. இதனால், நகர்ப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள்  நேற்று முதலே தங்களது சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதற்காக மாநில அரசு, சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. இருந்தாலும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக  சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறையையொட்டி 24ஆம் தேதி நாகர்கோவில் – சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறு மார்க்கத்தில் அக்டோபர் 25ஆம் தேதி சென்னை – நாகர்கோவில் இடையே இயக்கப்படுகிறது.  இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.